Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, March 27, 2009

யந்திர சக்தி

யந்திர சக்தி
- வரி வடிவில் ஆற்றல்.

பிரபஞ்ச சக்தி அனைத்து பொருளிலும் வெளிப்படுகிறது. இந்த பிரபஞ்ச சக்தி இல்லாத இடமே இல்லை என கூறலாம். சக்தி நிலையை மெய்ஞானத்தால் உணர்ந்தவர்கள் "சர்வம் சக்தி மயம் " என கூறினார்கள். சக்தி இல்லாத இடமே இல்லை என்பதை தாண்டி இந்த கூற்றில் பல அர்த்தங்கள் நிறைந்துள்ளது.

ஆற்றல் பல வடிவங்களில் வெளிப்படுகிறது. கிரக ஆற்றல், நட்சத்திர ஆற்றல் என்பவை ஆற்றலின் சில வடிவங்கள் ஆகும். கிரக
ஆற்றலை கொண்டு மனிதன் பல விஷயங்களை செய்தான். ஆற்றலை உணர்ந்ததன் மூலம் சாஸ்திரங்கள் அவனின் உள்ளங்கையில் வசப்பட்டது.

வேதகால மனிதன் சக்தி வடிவங்களாக அனைத்தையும் கண்டுணர்ந்த பிறகு சக்தி மூலங்களை கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டான்.
இந்த முயற்சியிலும் விரைவிலேயே வெற்றி கண்டான். ஆற்றலின் மூலம் எது, எங்கிருந்து ஆற்றல் வெளிப்படுகிறது. என சக்தியின் உள்கருவை மெய்ஞான வடிவில் உணர்ந்தனர். ஆற்றல் வெளிப்படுவது நிரந்தரமற்றது. மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். ஆற்றல் அழிவதில்லை. ஆற்றலின் செயலும் அதன் மூலமும் மாற்றம் அடைவது இயல்பு.

பேராற்றல் மாற்றம் அடைவதையும் பல சக்தி ரகசியங்களைக் கண்டு உணர்ந்த வேத கால மனிதன் ரிஷி என அழைக்கப்பட்டான். ரிஷி
என்னும் சொல்லுக்கு "கண்டுணர்ந்தவன்" என பொருள் கூறலாம். ரிஷிகள் மூலத்தையும் சக்தி மாற்றத்தையும் உணர்ந்து கொண்ட பின்பு சக்தியை நிலைப்படுத்தும் நிலையான யுக்தியை வகைப்படுத்தினார்கள். சக்தியை மாற்றம் அடையாமல் நிலையான செயலுக்கு கொண்டுவந்தனர். இந்த நிலையான சக்திமையங்கள் " சக்தி கேந்திரம்" என அழைக்க்கப்பட்டது. ரிஷிகளால் செயற்கையாக கண்டுபிடிக்கப்பட்டாலும், சக்தி கேந்திரங்கள் இயற்கை தன்மையிலிருந்து எடுக்கப்பட்டது.




மலை முகடுகள், அருவிகள் மற்றும் குகைகள் அனைத்தும் இயற்கையின் எளிய ஆற்றல் மையங்கள்
ஆகும். தெய்வீக வாழ்வில் ஈடுபடாதவர்கள் கூட மேற்குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் பொழுது உள்நிலையில் மாற்றம் அடைவார்கள். இயற்கையான சக்தி கேந்திரங்கள் அனைத்து இடத்திலும் இருப்பதில்லை. இதன் காரணமாக ரிஷிகள் சக்தி கேந்திரத்தை செயற்கை முறையில் உருவாக்கி தாங்கள் செல்லும் இடமெல்லாம் கொண்டு சென்றனர். இந்த சக்தி கேந்திரங்களே யந்திரம் என ரிஷிகளால் அழைக்கப்பட்டது.

நவீன காலத்தில் யந்திரம் எனும் சொல்லுக்கு தவறான அர்த்தமே கற்பிக்கப்படுகிறது. யந்திரம் என்பது ஆற்றல் செயல்வடிவில்
இல்லாமல் வரிவடிவில் அமைக்கப்பட்டது. இந்த யந்திர சாஸ்திரத்தை எளிய உதாரணம் மூலம் விளக்கலாம். நாம் வாழும் நகரத்தின் வரைபடத்தை கையில் வைத்துக்கொண்டு முக்கிய வீதிகள் மற்றும் இடங்களை காண்கின்றோம். அந்த சமயம் நமது எண்ணங்களில் முக்கிய வீதிகள் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி விரிந்துகொண்டே இருக்கும். உண்மையில் நாம் அந்த வீதிகளில் சென்ற உணர்வை கொடுக்கும். யந்திரமும் இது போன்றே செயல்படுகிறது. ஒருமுறை யந்திரத்தை பார்த்தவுடன் உங்கள் உள்நிலையில் சிறு மாற்றத்தை அது ஏற்படுத்துகிறது.

வீடுகட்டுவதற்கு முன்பு அதற்கு உண்டான திட்டத்தை வரைபடமாக உருவாக்குகிறோம். அந்தவரைபடத்தை பார்க்கும் பொழுது நமக்கு
காகிதமோ, கோடுகளோ தெரிவதில்லை. அவை மனதில் கட்டிடத்தின் தோற்றத்தை உருவாக்குகின்றது. வரைகலை வடிவில் உருவாக்கப்பட்ட வடிவங்கள் மனதில் மாற்றத்தை உருவாக்கும். நடைமுறை வாழ்க்கை உதாரணம் ஓரளவே யந்திர சக்தியை விவரிக்கும். யந்திரத்தால் உருவாக்கப்படும் மாற்றம் மனதின் எல்லைக்கு அப்பாற்பட்டது. சக்தியூட்டப்பட்ட எந்திரம் மனதை தாண்டி உங்கள் ஆன்மாவில் வேலை செய்யும்.

கம்யூட்டர் யுகத்தில் யந்திரம் வேலை செய்யுமா? என தோன்றலாம். சரியான முறையில் யந்திரம் அமைத்து அதில் சக்தியூட்ட தெரிந்தவர்கள் இருந்தால் தாராளமாக வேலை செய்யும். உங்கள் அலைபேசியில் இருக்கும் சிம் கார்டு அல்லது கம்யூட்டரில் இருக்கும் PCB வடிவ தகடுகளில் இருக்கும் வடிவம் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? ஆனாலும் அது வேலை செய்கிறது தானே? அது போலத்தான் யந்திரங்களும்.

கம்யூட்டர் சில்லை
சரியான பொறியியலாளரிடம் கொடுத்தால் அவர் இயங்க வைப்பார். அதை விடுத்து அந்த மின்னனு வரை படத்தை கழுத்தில் தொங்க விட்டால் வேலை செய்யுமா?

திடீரென உலகம் அழிந்துவிட்டதாக வையுங்கள், எஞ்சிய பொருளில் அலைபேசியின் சிம்கார்டு மட்டும் எஞ்சி நிற்கிறது. நினைத்து பாருங்கள் அலைபேசி கிடையாது, அதை ஒலிபரப்பும் கோபுரம் இல்லை, அலைபேசியை நிர்வாகிக்கும் நிறுவனம் இல்லை. ஆனால் சிம்கார்டு மட்டும் உண்டு. மனித சமுதாயம் மீண்டும் உருவானதும் அவர்களிடம் இது கிடைத்தால் என்ன செய்வார்கள்? மிக எளிமையாக பதில் சொல்லிவிடலாம் சிலர் யந்திரங்களை இப்பொழுது எப்படி பயன்படுத்துகிறார்களோ அது போல சிம்கார்டில் சந்தனம் குங்குமம் வைத்து வழிபடுவார்கள். அது போல நாமும் நமது நாகரீகத்தை தொலைத்து கைகளில் வெறும் தகடுகளுடன் திரிகிறோம்.

யந்திரங்கள் என்பது இயங்கு சக்தி கொண்ட சாதனம். இந்த சொல்லின் தமிழ் வடிவமே இயந்திரம் (பொறி) என்கிறோம். இயங்கும் சாதனமே யந்திரம் எனும் பொழுது யந்திரங்கள் இயங்கி பார்த்திருக்கிறீர்களா? தற்கால அறிவியல் தானியங்கி இயந்திரங்களை வடிவமைக்கிறது. உண்மையில் யந்திரங்கள் சக்தியூட்டப்பட்டால் தானியங்கி மற்றவைகளையும் இயக்குகிறது.



யந்திரத்தை கவனித்தோம் எனில் பல கோடுகள், முக்கோணங்கள் மற்றும் வட்டங்கள் அதில் காண முடியும்.

ஏன் அவ்வாறு இருக்கிறது என அடுத்த பகுதியில் காண்போம்.

12 கருத்துக்கள்:

ஷண்முகப்ரியன் said...

காலை வணக்கம்.விளக்கம் நன்று ஸ்வாமிஜி.ஆனால் அனைவருக்கும் சாத்தியமாகாத நுட்பொருளை விளக்கி என்ன பயன் என்பதுதான் புரியவில்லை.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறது !

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

காலை வணக்கம்.

அனைவருக்கும் சாத்தியமே. ஆன்மீகம் அனைவருக்கும் சாத்தியமே. முயன்றவன் முயலாதவன் என இரு வித்தியாசமே உண்டு. முயலாதவனும் என்றாவது ஒரு நாள் முயற்சி செய்தே ஆகவேண்டும்.

அந்த சமயம் நான் போட்ட இந்த விதை பயன் கொடுக்கலாம்.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அருப்புக்கோட்டை பாஸ்கர்,

உங்கள் வருகைக்கு நன்றி

krish said...

Excellent explanation.

எம்.எம்.அப்துல்லா said...

சாமி ஆற்றலின்(சக்தியின்) வெளிப்பாடு ஆறு வகை என குர்-ஆன் சொல்லுகின்றது. இது பற்றி வேதமோ அல்லது வேறு இந்து மத நூல்களோ என்ன சொல்லுது சாமி?

sundaresan p said...

வணக்கம் ஸ்வாமி

இப்போது கூட எங்கள் வீட்டில் எந்திரம் மந்திரிர்த்து பூஜையில் வைத்து
வழிபடுகிறோம் அதனால் பயன் இல்லைய?

Mahesh said...

உங்களின் போன பதிவில் உங்கள் பேச்சைக் கேட்ட பின்பு இந்த பதிவுக்காக காத்திருந்தேன். நல்ல பதிவு. நல்ல செய்திகள். நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.கிருஷ்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அப்துல்லா அண்ணே,

ஆற்றல் அடிப்படையில் ஐந்து வகை(பஞ்ச பூதம் அல்ல)என்கிறது உபநிஷத். அதுவே பரிணாமித்து எண்ணற்றதாக மாறுகிறது. இதில் 6, 8, மற்றும் 12 என்றும் எண்ணிக்கையில் கூறப்படுகிறது.
(ஆதாரம் திருமந்திரம்)

குர்-ஆன் விளக்கத்தை தனிமடலில் சிறிது விளக்கமாக தரமுடியுமா? அதை ஒப்பிட்டு சொல்ல மேலும் வசதியாக இருக்கும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுந்தர்,

உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம் தவறல்ல. ஆனால் யந்திரங்கள் பூஜை செய்வதற்கு மட்டுமல்ல.

அடுத்து வரும் பகுதியில் இதன் விளக்கம் இருக்கும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு. மகேஷ்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி